தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகைகளில் பிரபலமானவர்தான் ஆர்த்தி. இவர் திரைக்கு வந்தாலே இயல்பாகவே உதடுகள் புன்னகை போக்கும். சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் இன்று சிறந்த காமெடி நடிகையாக உள்ளார். இவர் தனது கணவர் கணேஷ் கருடன் சிறுவயதில் என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சினிமா வாய்ப்புகள் அதிகமானதால் குடும்பத்தோடு சென்னையில் செட்டில் ஆனார். 63 படங்கள் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஆர்த்தி பொதிகை தொலைக்காட்சியில் வந்த கதையின் கதை சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
பிறகு சினிமாவிலும் வாய்ப்பை பெற்ற இவர் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் தனுஷின் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது இவருக்கு அவ்வளவு ஆக பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கிறார். இதனிடையே ஆர்த்தியின் தந்தை ரவீந்திரன் (83) உடல்நல குறைவால் காலமானார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் தனிச்செயலாளராக பணியாற்றிய ஓய்வு பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இவருடைய உடல் இன்று மதியம் அடக்கம் செய்யப்படுகிறது.
