தமிழ் சினிமாவில் தன்னுடைய பாடல்களால் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டவர் தான் பாடகர் கிரிஷ். வங்கி ஊழியரான இவரது தந்தைக்கு அமெரிக்காவில் பணியிட மாறுதல் கிடைத்த நிலையில் இவரின் குடும்பம் அமெரிக்காவிற்கு சென்றது. ஏறத்தாழ பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கு தொடர்ந்த இவர் அங்கு சினிமாவில் நடிப்பதற்கான படிப்பை படித்து முடித்தார். பிறகு சென்னை திரும்பிய கிரிஷ் இசையமைப்பாளர் கணேஷ் குமாரின் ஆல்பத்திலும் மேடைகளிலும் பாடிக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கணேஷ்குமார் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இவரது குரல் வளத்தை பற்றி சொல்ல அதன் பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவர் தற்போது முன்னணி பாடகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் க்ரிஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் சினிமாவில் நுழைந்த சுவாரஸ்யமான கதையை பகிர்ந்து கொண்டார். அதில், நான் முதலில் ஒரு ஷாப்பர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். அதாவது திரை பிரபலங்களுக்கு கார் ஓட்டக்கூடிய ஒரு கம்பெனி. நான் அங்கு சேர்ந்ததற்கான காரணமே திரை பிரபலங்களை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்பதற்காகத்தான். அப்படி நான் அங்கு வேலைக்கு சேர்ந்ததும் ஏ ஆர் ரகுமான் சாருக்கு ஒரு ஆறு முறை கார் ஓட்டிருக்கேன். அதனைப் போலவே ஷாருக்கான், அமீர்கான் மற்றும் பாலு மகேந்திரன் சார் என பல பேருக்கு டிரைவரா வேலை பார்த்தேன். அதுக்கப்புறம் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கூட நியூயார்க் போய் இருந்தேன்.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/krish-sangeetha.jpg)
அங்க போனதும் ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு. அங்க ஜோதிகா மேம் நின்னுட்டு இருக்காங்க கமல் சார் மற்றும் கௌதம் சார் எல்லாம் நின்னுட்டு இருக்கும்போது ஒரு பாடல் ஷூட்டிங் நடக்குது. இந்த பாட்டு தான் வெள்ளி நிலவே வெள்ளி வெள்ளி நிலவே பாட்டு. அதுக்கப்புறம் சூட்டிங் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் ஊருக்கு போலாம்னு நானும் கிளம்புறேன். அப்போ ஒருத்தர் கிட்ட நான் பேசிட்டு இருக்கும்போது பத்து வருஷமா முயற்சி பண்ணிட்டு இருக்கேன் ஒண்ணுமே கிடைக்கலை என்று நான் வருத்தத்தோடு கூறினேன். அப்போ அவரு எங்க ஊருக்கு வாங்க சார் ஒரு சாமி இருக்கு அத பாருங்க அப்புறம் உங்களுக்கு நல்லதே நடக்கும் என்று சொன்னாரு. சரி போலாம் என்று சொன்னதும் கிளம்ப தயாரானோ.

அமெரிக்காவில் இருந்து நான் வந்த அடுத்த நாள் பஸ்ஸில் டிராவல் பண்ணும் போது கணேஷ் குமார் என்ற ஒருவரை பார்த்தேன். அவர்கிட்ட பேசிட்டு இருக்கும்போது நான் ஒரு கம்போசர் தான் என்கிட்ட ஒரு பாட்டு இருக்கு நீங்க பாடுறிங்களா என்று கேட்டாரு. சரி என்று பாடி கொடுத்துட்டு அடுத்த நாள் நான் திருவண்ணாமலைக்கு கிளம்பிட்டு இருக்கேன். பஸ்ல இருந்து இறங்கி திருவண்ணாமலையில் கீழே கால வெச்சதும் எனக்கு போன் வருது. அந்த போன்ல கணேஷ்குமார் சார், கிரிஷ் உங்க பாட்ட ஹாரிஸ் ஜெயராஜ் கேட்டுட்டு நல்லா இருக்குன்னு சொல்லி உங்களை கூப்பிட்டுட்டாரு நீங்க கிளம்பி வாங்க என்று என்கிட்ட சொன்னாரு. அவ்வளவு சந்தோசம். அன்னைக்கு அந்த கடவுளோட பவர பார்த்த நான் இன்னைக்கு வரைக்கும் விடல என்று கிரிஷ் பேசி உள்ளார்.
