“நீ சினிமாவுல பெரிய ஆளாக வருவாய் என்று வாழ்த்திய ஜானகி”.. எஸ்பிபி வாழ்வில் நடந்த பலரும் அறியாத சுவாரசிய சம்பவம்..!

By Nanthini on மார்ச் 29, 2025

Spread the love

நீங்காத இடம் பிடித்தவர் தான் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம். தமிழ் திரை இசையில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இவர் பாடல்களை பாடியுள்ளார். பாடகராக மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். தமிழ் திரை உலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர். இவருடைய குரல் என்பது மூன்று தலைமுறையின் குரல். அதனால்தான் இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் மறையும் வரை பாடிக் கொண்டே இருந்தார்.

எஸ்.பி.பி பிறந்த தினம் இன்று | Happy birthday, SP Balasubramaniam! - Tamil  Filmibeat

   

தமிழ் திரை இசை ரசிகர்களால் பாடும் நிலா பாலு என்ற அன்புடன் அழைக்கப்பட்ட பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியது. அவர் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.  இந்நிலையில் மறைந்த நடிகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் பற்றி பிரபல பாடகி ஜானகி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

   

எஸ்.பி.பாலசுப்ரமணியம்: சங்கீத உலகில் ஓர் அத்தியாயம்

 

அதில், எஸ் பி பாலசுப்ரமணியம் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு நான் ஒரு பாடல் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அங்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்த நிலையில் அங்கு பாலசுப்பிரமணியம் போட்டியாளராக கலந்து கொண்டு பாடல் பாடினார். அதில் அவருக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. ஆனால் உண்மையிலேயே முதல் பரிசு வாங்கிய பையனை விட பாலசுப்பிரமணியம் தான் நன்றாக பாடினார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்: சங்கீத உலகில் ஓர் அத்தியாயம்

நான் அந்த தலைமை நிர்வாகத்திடம் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. அதன் பிறகு நான் எஸ் பி பாலசுப்பிரமணியத்தை சந்தித்து நீ ஒன்றும் கவலைப்படாதே இரண்டாவது பரிசு கிடைத்தால் கிடைக்கட்டும் நீ சினிமாவில் மிகப்பெரிய ஆளாக வரப்போகிறார் என்று வாழ்த்தினேன். நான் அன்று சொன்னதைப் போலவே அவரும் சினிமாவில் மிகப்பெரிய பாடகர் ஆக வந்துவிட்டார் என்று ஜானகி அந்த வீடியோவில் பேசியுள்ளார்