நான் உடன் எடை குறைக்க முக்கிய காரணமே மறைந்த என் அம்மா தான்… இசையமைப்பாளர் இமான் சொன்ன சீக்ரெட்..!

By Nanthini on பங்குனி 29, 2025

Spread the love

தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் டி.இமான். 2002 ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் D இமான். அதைத் தொடர்ந்து விசில் திரைப்படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தலைநகரம், வீராப்பு, திருவிளையாடல் ஆரம்பம், நூற்றுக்கு நூறு, மாசிலாமணி, கச்சேரி ஆரம்பம், மனம் கொத்தி பறவை, கும்கி, வெள்ளக்கார துரை, தொடரி, மருது ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் D இமான். அதன் பிறகு ரஜினி மற்றும் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

எதிர்க்கட்சியினரையும் கூட பிரமிக்க வைத்தவர் ஜெயலலிதா: இசையமைப்பாளர் இமான்#RIPAmma | Even opposition parties admire Jaya: Imman - Tamil Filmibeat

   

இதனிடையே இசையமைப்பாளர் இமான் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர்.  ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் தனது மனைவியை இமான் விவாகரத்து செய்து விட்டார். அதுவும் விவாகரத்து செய்து ஓராண்டுக்கு பிறகு தான் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இமான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

   

இசையமைப்பாளர் டி. இமானின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம்

 
பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் எமிலி என்பவரை இமான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அவரை மறுமணம் செய்து முடித்துள்ளார். இவர்கள் இருவருமே திருமணத்திற்கு பிறகு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள்.  இப்படியான நிலையில் மிகவும் குண்டாக இருந்த இமான் ஒரே வருடத்தில் சுமார் 42 கிலோ எடையை குறைத்து இருந்தார். தற்போது பார்ப்பதற்கே இமான் மிகவும் ஸ்லிம்மாக இளமையாக இருந்து வருகின்றார்.
DImma
தற்போது அதற்கான காரணத்தை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், உடல் எடையை குறைப்பதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன். ஒரு உணவகத்தில் நான் இன்று தான் கடைசியாக இங்கு சாப்பிட போகிறேன் இனி நான் இங்கு வரமாட்டேன் என்று முடிவு செய்து அதை கடைபிடித்தேன். வாழ்க்கையில் எந்த விஷயம் நம்மை மாற்றும் என்று தெரியாது. குறிப்பாக என்னுடைய அம்மாவின் மறைவு என்னை மிகவும் பாதித்தது. மிகவும் சிறுவயதிலேயே அவங்க என்னை விட்டு பிரிஞ்சிட்டாங்க. அப்போது நான் ரொம்ப ஜப்பியா இருந்தேன். அதன் காரணமாகவே நான் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்து குறைத்தேன். மற்றவர்களுக்காக பார்க்காமல் நம் உடல் ஆரோக்கியத்திற்காக நம் உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று இமான் பேசியுள்ளார்.