துன்பங்களோடு தவிக்கும் இதயங்களுக்கு இசை மருந்து போட்ட அனுராதா.. சிறையில் பாடி மகிழ்ந்த நெகிழ்ச்சியான தருணங்கள்..!

Spread the love

திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர் பாடகி அனுராதா ஸ்ரீராம். இவர் ‘பம்பாய்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மலரோடு மலரிங்கு’ என்ற பாடலை குருப் பாடலாக பாடி திரையுலகில் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து வரும் ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அன்பென்ற மழையிலே’ என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். அதன் பின்னர் இவர் பல படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.

தன்னுடைய ஆறு வயதிலேயே இசைப் பயிற்சியை தொடங்கியவர். தற்பொழுது இவர்  இசைக்கச்சேரிகள்,, இசை நிகழ்ச்சிகள் என பலவற்றை நடத்திக் கொண்டு வருகிறார்.  ‘கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு’, கண்ணன் வரும் வேளையில், மல்லிகையே மல்லிகையே, லேசா லேசா  என பல காதல் பாடல்கள் பாடியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அப்படி போடு போடு, அச்சம் அச்சம் இல்லை என பல துள்ளல் வகை பாடல்கள் இன்றும் பிளேலிஸ்ட்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தொடர்ந்து நிலவைக் கொண்டு வா, டேய் கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா, ஓ போடு என பல கில்மா பாடல்களையும் பாடியுள்ளார்.

இப்பாடல்களை கேட்கும் பொழுது ‘அன்பென்ற மழையிலே’ என்ற பாடலை பாடிய அனுராதா வா இதையும் பாடினார் என ஆச்சரியமாக இருக்கும். இவ்வாறு நான்கு  பரிமாணங்களிலும் கலக்கியவர் பாடகி அனுராதா ஸ்ரீராம்.

இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவர் அனைத்து மொழிகளிலும் இதுவரை 4000ம் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.  இப்படியான நிலையில் அனுராதா ஸ்ரீராம் புலழில் உள்ள பெண்கள் சிறையில் ஒரு நிகழ்ச்சி நடத்தி பாடல் பாடியுள்ளார். உஜ்ஜினியை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் இதில் பங்கேற்று உள்ளார்.

பல துன்பங்களை தாங்கிக்கொண்டு குழந்தைகள், குடும்பத்தினர் ஏக்கத்துடன் கர்ப்பிணிகளாகவும், உடல் நலமற்ற பெண்களாகவும் வாழ்க்கையை கலைத்துக் கொண்டிருக்கும் அனைவர் முன்பும் பாடி மகிழ வைத்துள்ளார்.

அங்கு இருக்கக்கூடிய பெண்கள் தங்களால் முடிந்த கைவினைப் பொருட்களை தயாரிக்கின்றனர். பல இதயங்களை குணப்படுத்தக்கூடிய இசை பரிசை அனுராதா அங்கு சென்று வழங்கியுள்ளார். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அதை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

4 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

4 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

5 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

5 மணத்தியாலங்கள் ago