வேற வழி இல்ல.. நாங்கள் பாடல்களை இசையமைப்பது இப்படித்தான்.. பல வருட சீக்ரெட்டை உடைத்த அனிருத்..!

By Nanthini on வைகாசி 6, 2025

Spread the love

இன்று தமிழ் சினிமாவில் ராக்ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் அனிருத். தனுஷின் 3 என்ற திரைப்படத்தின் மூலமாக முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது தனுஷ் தான். முதல் படமே அனிருத்தை இந்த உலகிற்கு யார் என காட்டியது. அதிலிருந்து தொடர்ந்து தன்னுடைய துள்ளலான இசையால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு இனி இவர்தான் இசை என்ற ஒரு சூழ்நிலையை அனிருத் உருவாக்கினார்.

Happy Birthday Anirudh Do You Know How Much Anirudh Gets Paid For A Film |  ஒரு படத்திற்கு அனிருத் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா | News in Tamil

   

அதுவரை பெரிய பெரிய முன்னணி நடிகர்களுக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வந்த நிலையில் அவரையே டேக் ஓவர் செய்து இன்று இந்திய சினிமாவில் போற்றத்தக்க வகையில் அனிருத் வளர்ந்து நிற்கின்றார். தமிழை தாண்டி மற்ற மொழி சினிமாக்களிலும் இவர் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். வெளிநாடு கச்சேரிகளையும் நடத்தி உலக அளவில் மிகவும் பாப்புலர் ஆகியுள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக காப்பிரைட்ஸ் என்ற ஒரு பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது. அதுவும் தன்னுடைய பாடல்களை தன் அனுமதி இல்லாமல் படங்களில் பயன்படுத்துவதை எதிர்த்து இளையராஜா குரல் கொடுத்து வருகின்றார்.

   

இசை நிகழ்ச்சி நடத்துகிறார் அனிருத் | Anirudh conducts the music programme -  hindutamil.in

 

இளையராஜாவிற்கு ஆதரவாக அவருடைய தம்பியும் இசையமைப்பாளரும் ஆனால் கங்கை அமரனும் சேர்ந்து குரல் கொடுத்து வருகின்றார். சமீபத்தில் கூட ஒரு விழா மேடையில் பேசிய போது சொந்தமாக உங்களால் பாட்டு போட முடியாதா, ஏழு கோடி சம்பளம் வாங்கிட்டு என்ன பண்றீங்க, உங்களுடைய இசையில் அமைந்த பாட்டுக்கு கைதட்டுவதை விட எங்களுடைய பாடல்களுக்கு தான் ரசிகர்கள் கைதட்டுகிறார்கள் என்று கங்கை அமரன் பேசி இருந்தார். இப்படியான நிலையில் நாங்கள் எந்த சூழ்நிலையில் இசையமைக்கிறோம் என்பதை அனிருத் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அஜித்தின் விடாமுயற்சிக்கு பெரும் அடி: அனிருத் ரவிச்சந்தர் எங்கே?

அதில், நாங்கள் தினமும் பாடல்களை உருவாக்குகிறோம். அதில் நன்றாக இருக்கிறது என தோன்றும் பாடல்களை தனியாக நாங்கள் சேமித்து வைப்போம். அவற்றுக்கு பொருத்தமான சூழல் கொண்ட திரைப்படம் வரும்போது அதை அப்படியே கொடுத்து விடுவோம். ஒரு படத்தின் சூழலுக்கு என உருவாகும் பாடல் மிக குறைவு தான். நான் இதுவரை இசையமைத்த படங்களில் 85 சதவீதம் பாடல்கள் இந்த படத்துக்கு என முடிவு செய்து உருவாக்கியது கிடையாது. இது தவறான வழிமுறை என்று தெரியும். ஆனால் எங்களுக்கு இது சரியாக இருப்பதால் அதனை செய்கிறோம் என்று இசையமைப்பது குறித்த சீக்ரெட்டை அனிருத் வெளிப்படையாக கூறியுள்ளார்.