நகையுடன் தப்பித்து ஓடும் ஆனந்தி.. சுயம்புலிங்கம் சதியால் சுற்றி வளைத்த திருடர்கள்.. சிங்கபெண்ணே சீரியலில் இன்று..!!

By Priya Ram on ஆகஸ்ட் 29, 2024

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்க மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சன் டிவியில் சிங்க பெண்ணே சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை தனுஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தினமும் விறுவிறுப்பான கதைக்களத்தோடு சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது செவரக்கோட்டையில் நடைபெறும் திருவிழாவிற்காக அன்பு, ஆனந்தி, மகேஷ், மித்ரா உள்ளிட்டோர் வந்தனர்.

   

திருவிழா ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து ஆனந்திக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். கயிறு இழுக்கும் போட்டியில் சுயம்புலிங்கம் வம்புக்கு இழுத்ததால் அன்பும் மகேஷும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர். ஆனந்தி தீ மிதிக்கும் போது சுயம்புலிங்கம் சதி செய்து பேனரை கீழே உள்ள செய்கிறார். அப்போது அதிர்ஷ்டவசமாக அன்புவும், மகேஷும் பேனரை பிடித்துக் கொண்டதால் ஆனந்தி அதிலிருந்து தப்பித்து விடுகிறார்.

   

 

அண்ணனை பார்ப்பதற்காக யாரும் இல்லாத நேரத்தில் கோவிலுக்கு சென்ற ஆனந்தி மீது திருட்டு பழி விழுகிறது. ஊரில் உள்ள அனைவரும் ஆனந்தி தான் குற்றவாளி என நினைக்கின்றனர். இதனால் எப்படியாவது திருடர்களை பிடித்து விட வேண்டும் என ஆனந்தி நினைக்கிறார். இன்று சிங்க பெண்ணே சீரியல் ப்ரோமோ வெளியானது. அதில் கோவில் நகைகளை திருடிய மூன்று பேரையும் ஆனந்தி பார்த்து விட்டார். அவர்களிடம் ஒழுங்காக நகையை கொடுத்து விடுங்கள் என கூறுகிறார்.

நகைகளை திருடியவர்களில் ஒருவர் சுயம்பு லிங்கத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் இவ்வளவு நாளாக யாரை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அந்த பெண்தான் நகையை பறித்துக் கொண்டு எங்களிடமிருந்து தப்பித்து ஓடுகிறார் என சுயம்புலிங்கத்திடம் கூறுகிறார். திருடர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் நகையுடன் அங்கிருந்து ஆனந்தி தப்பித்து செல்கிறார். மறுபுறம் அன்பு மகேஷ் ஆகியோர் ஆனந்தியை தேடி வருகின்றனர். இதற்கிடையே யாரோ ஒருவர் ஆனந்தியை தாக்கிவிட்டார். அன்பு மகேஷ் ஆகியோர் ஆனந்தியை கண்டுபிடித்து திருடர்களிடமிருந்து காப்பாற்றுவார்களா என்பதை இனி வரும் எபிசோடில் தான் பார்க்க வேண்டும்.

author avatar
Priya Ram