CINEMA
10 வருஷத்துக்கு முன்பே வாழை படத்தின் கதையை நான் எழுதிட்டேன்.. எங்கிட்ட அனுமதி வாங்கவே இல்ல.. பரபரப்பை கிளப்பிய சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ.தர்மன்..!!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23-ஆம் தேதி வாழை படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. தனது சிறுவயதில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்ததாக மாரி செல்வராஜ் கூறியிருந்தார். மேலும் வாழை படம் இடம்பெற்றுள்ள வேம்பு கதாபாத்திரம் சிறுவயதில் வாழைத்தார் சுமைக்கும் வேலைக்கு சென்று விபத்தில் இறந்தது தனது அக்காவின் கதாபாத்திரம் என கூறியிருந்தார்.
வாழ்க்கையில் மிகப்பெரிய கண்ணீர் தான் இந்த படம் என மாரி செல்வராஜ் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அந்த வரிசையில் இப்போது வாழை திரைப்படமும் இணைந்துள்ளது.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வாழை படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் எழுத்தாளரான சோ.தர்மன் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் அதிகம் சினிமா பார்ப்பதில்லை. எப்போதாவது தான் பார்ப்பேன். சமீபத்தில் வெளியான வாழை படம் பார்த்து எனது நண்பர்கள் நான் எழுதிய “வாழையடி___” என்ற சிறுகதையை போல இருப்பதாக கூறினார்.
அதன் பிறகு நான் வாழை படத்தை சென்று பார்த்தேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கதை வாழையடி. அதற்கு காரணம் சிறுவர்கள் பல தலைமுறைகளாக இந்த வேலையை செய்து வருகின்றனர் என்பதை குறிக்கும் வகையில் தான் அவ்வாறு பெயர் வைத்தேன். நான் அச்சு ஊடகத்தில் எழுதிய கதையைத்தான் இப்போது காட்சி ஊடகமாக மாற்றி எடுத்துள்ளனர் என கூறியுள்ளார்.