சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்க மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சன் டிவியில் சிங்க பெண்ணை சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை தனுஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தினமும் விறுவிறுப்பான கதைக்களத்தோடு சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சவரக்கோட்டையில் நடைபெறும் ஊர் திருவிழாவிற்கு ஆனந்தியின் அம்மாவும் அப்பாவும் அழைப்பு விடுத்ததால் ஆனந்தி தனது நண்பர்களுடன் அங்கு செல்கிறார். செவரக்கோட்டையில் ஆனந்தி, மகேஷ், அன்பு, ஹாஸ்டல் வார்டன், தோழிகள் உட்பட அனைவரும் இருக்கின்றனர்.

ஆனந்தி ஊருக்கு வந்ததிலிருந்து சுயம்பு லிங்கம் சதி வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டார். நேற்றைய எபிசோடில் ஆனந்தியின் தாய் தந்தையுடன் சுயம்புலிங்கம் தகராறு செய்து ஆனந்தியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறுகிறார். இதனை கேட்டு கோபப்பட்ட மகேஷ் சுயம்புலிங்கத்தை தாக்க முயல்கிறார். இப்போது மித்ராவும் சுயம்புலிங்கத்துடன் இணைந்து கொண்டு ஆனந்திக்கு கெடுதல் செய்கிறார்.

ஒரு பக்கம் மகேஷ் ஆனந்தியின் அப்பாவிடம் பெண் கேட்க செல்கிறார். மறுபக்கம் அன்பு அழகன் என்பது நான் தான் எனக் கூறி தனது காதலை வெளிப்படுத்த முயல்கிறார். மித்ராவும் சுயம்புலிங்கமும் இணைந்து ஆனந்தியை செவரகோட்டையிலேயே தங்க வைக்க சதி திட்டம் தீட்டுகின்றனர். யார் நினைத்தது நடக்கும் என்பது இன்றைய எபிசோடில் தான் தெரிய வரும். அதன் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் அழுத்தியுள்ளது.
![]()
