ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்… தினமும் 2.5 ஜிபி டேட்டா.. மிஸ் பண்ணிடாதீங்க..!

By Nanthini on ஆவணி 16, 2024

Spread the love

இந்தியாவின் முன்னணியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. முதலில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளையும் மலிவு விலையிலான திட்டங்களையும் வழங்கி வந்தது. அதன் பிறகு ரீசார்ஜ் கட்டணங்களை கணிசமாக உயர்த்தி வந்த நிலையில் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

   

இந்தியாவில் தனது நெட்வொர்க் விரிவாகத்தை தொடர்ந்து ஜியோ நாடு முழுவதும் இணைய சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ 2.5 ஜிபி தினசரி டேட்டாவுடன் 3 ப்ரீபெய்ட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதில் குறைந்த விலையில் 399 ரூபாய் திட்டமாகும். இதன்மூலம் 2.5 ஜிபி 4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் 5G சேவையும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. 399 ரூபாய் ஜியோ திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

   

 

மேலும் நீண்ட கால பயன்பாட்டிற்காக 365 நாட்கள் செல்லுபடி ஆகும் ரூ.3,599 மற்றும் 3999 ரூபாய் ஆகிய வருடாந்திர திட்டங்களும் உள்ளன. இந்த திட்டங்களின் தினசரி 2.5 ஜிபி டேட்டா வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கிறது. மேலும், JioTV, JioCinema (பிரீமியம் அல்ல) மற்றும் JioCloud சந்தாக்களும் இந்தத் திட்டத்தில் கிடைக்கும்.