பருவ காலங்கள் மாறும் போது நம்முடைய சருமத்தின் தன்மையும் மாறும். குளிர்காலங்களில் எப்படி சருமம் வறட்சி ஆகின்றதோ அதனைப் போலவே கோடை காலம் மற்றும் பிற பருவங்கள் வரும்போதும் சருமத்தில் ஏற்படும் மாசுக்கள், வியர்வை காரணமாக சில சரும பிரச்சனைகள் தோன்றும். அதில் முக்கியமான ஒன்றுதான் இந்த முகப்பரு பிரச்சனை. இதனை சரி செய்ய நாம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால் எதற்குமே பலன் கிடைத்திருக்காது. வீட்டில் உள்ள எளிய பொருள்களை வைத்தே முகப்பருக்களை எளிதில் விரட்டி விடலாம்.
கற்றாழை சருமத்தை இளமையாக வைத்திருக்கும் என்பதால் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது பருக்களால் ஏற்படக்கூடிய எரிச்சல் மற்றும் பிற பக்க விளைவுகளின் பாதிப்பை குறைக்கும். கற்றாழை ஜெல்லுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்து வர முகப்பருக்கள் மிக வேகமாக சரியாகிவிடும். முகமும் பளபளப்பாக மாறும்.
அதனைப் போலவே முகப்பரு மட்டுமல்லாமல் சருமத்தில் எந்த தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்க மஞ்சள் உதவியாக இருக்கும். மஞ்சளை நீரில் கலந்து அப்ளை செய்தால் சருமத்திலிருந்து வேகமாக பருக்கள் உதிர்ந்து விடும். இதில் விளக்கெண்ணையை கலந்து அப்ளை செய்வது இன்னும் அதிக பலனை தரும்.
ஒரு ரூபாய் கூட செலவே இல்லாமல் உங்கள் முகப்பருக்களை விரட்ட வேப்பிலை பயன்படுத்தலாம். வேப்பிலையில் வைட்டமின் ஈ, கால்சியம், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் முகப்பருவை விரட்டுவது மட்டுமல்லாமல் சருமத்தை பளபளப்பாக மாற்றும். வேப்பிலை பொடி அல்லது பிரஷ் ஆன இலைகளை அரைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று மாறும்.
உடல் சூடு அதிகமானாலும் அடிக்கடி சிலருக்கு பரு வரும். அதுபோன்று உள்ளவர்களுக்கு சந்தன மிக சிறந்த தீர்வாக இருக்கும். கால் ஸ்பூன் சந்தன பொடியோடு இரண்டு சிட்டிகை வெந்தய கொடியுடன் சேர்த்து நீரில் குலைத்து அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
