#image_title
நகைச்சுவை நடிகரான வெங்கல் ராவ் ஆந்திராவின் விஜயவாடாவுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் பிறந்தவர். முதலில் சினிமாவுக்குள் சண்டை கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கடந்த 1995-ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் பிரபு நடிப்பில் உருவான கட்டுமரக்காரன் படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார்.
இவருக்கு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிரபல காமெடி நடிகரான வடிவேலுவுடன் இணைந்து வெங்கல் ராவ் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் வடிவேல் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் வெங்கல் ராவ் நடித்துள்ளார்.
இந்நிலையில் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட வெங்கல் ராவ் கடந்த 2022- ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் வெங்கல் ராவ் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர் கூறியதாவது, கை கால்கள் விளங்காமல் இருக்கிறேன். என்னால் பேச முடியவில்லை. மாத்திரை வாங்க கூட பணம் இல்ல. மருத்துவமனைக்கு போக முடியல. ரொம்ப கஷ்டப்படுறேன்.
எனக்கு சினிமா நட்சத்திரங்களும், தொழிலாளர்களும் உதவி பண்ணுங்க என வெங்கல் ராவ் பேசி வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் காமெடி நடிகராக வலம் வந்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா என பரிதாபப்பட்டனர். இந்த நிலையில் நடிகர் சிம்பு வெங்கல் ராவுக்கு 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார். அவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வெங்கல் ராவ் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வேண்டிக் கொள்வதாக கூறி வருகின்றனர்.
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…
கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…