Categories: சினிமா

வீட்டு வேல செஞ்சவங்கள வச்சு பாட்டுக்கு கோரஸ் பண்ண ரஹமான்… சும்மாலாம் ஆஸ்கர் வர போகல- பிரபல நடிகர் பகிர்ந்த ஆச்சர்ய தகவல்!

Spread the love

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.

தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஹ்மான் புதிய சென்சேஷனாக உருவான காலகட்டத்தில் இயக்குனர் விக்ரமனோடு இணைந்து பணியாற்றிய படம்தான் புதிய மன்னர்கள். இந்த படம் ஹிட்டாகவில்லை என்றாலும் பாடல்கள் சார்ட்பஸ்டர் ஹிட்டாகின. இந்த படத்தின் பாடல் ஒன்று பதிவின் போது பாடலின் நடுவே கோரஸ் வேண்டும் என இயக்குனர் விக்ரமன் கூறியுள்ளார்.

ஆனால் ரஹ்மான் இந்த பாடலுக்கு கோரஸ் வேண்டாம் என சொல்லவே, கண்டிப்பாக கோரஸ் வேண்டும் என விக்ரமன் பிடிவாதமாக இருந்துள்ளார். சரியென்று கோரஸ் கம்போஸ் பண்ணி கோரஸ் பாடும் கலைஞர்களை புக் பண்ண சொல்லியுள்ளார் ரஹ்மான். ஆனால் அன்றைக்கு பார்த்து எல்லா கோரஸ் கலைஞர்களும் பிஸி.

உடனே ரஹ்மான் வீட்டில் அன்று வேலை செய்தவர்களை எல்லாம் வரவழைத்து கோரஸ் ஒன்றை சொல்லிக் கொடுத்து அதைப் போலவே பாட சொல்லியுள்ளார். அவர்களும் ஒருமுறை பாட அதை ரெக்கார்ட் செய்து நான்கு இடத்தில் வெவ்வேறு விதமாக பயன்படுத்தினாராம். இப்போது கேட்டாலும் அந்த கோரஸ் தொழில் முறை கலைஞர்கள் பாடியது போலவே இருக்கும்.

இந்த தகவலை அந்த படத்தில் புரொடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றிய பாவா லட்சுமணன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் “ரஹ்மானின் அப்போது அந்த துணிச்சல் இருந்தது. சும்மாவெல்லாம் அவர் ஆஸ்கர் வரை செல்லவில்லை” என்று கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago