#image_title
தமிழ் சினிமாவில் பாவலர் பிரதர்ஸாக அறிமுகமாகிய இளையராஜா சகோதரர்களில் இளையராஜா போலவே பன்முகத் திறமை கொண்டவர் அவரின் தம்பி கங்கை அமரன். பாடல் எழுதுவது, இசையமைப்பது, இயக்குனர், நடிகர் என பல துறைகளில் வெற்றி கண்டவர் கங்கை அமரன்.
தான் கால்பதித்த அனைத்து துறைகளிலும் அவர் வெற்றிகளை சுவைத்தார். அவர் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஆல்டைம் கமர்ஷியல் வெற்றிப் படமாக உள்ளது. அவர் எழுதிய ஆயிரக் கணக்கான பாடல்கள் கிளாசிக்காக அமைந்துள்ளன. தான் பிஸியாக இசையமைத்துக் கொண்டிருந்த போது தன்னை இயக்குனர் ஆக்கியது தன்னுடைய அண்ணன் இளையராஜாதான் எனக் கூறியுள்ளார் கங்கை அமரன்.
கரகாட்டக்காரன் திரைப்படத்துக்குப் பிறகு பிஸியான இயக்குனர் ஆன கங்கை அமரன் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்பட்டனர். அப்போது ஒரே நேரத்தில் ரஜினி, விஜயகாந்த் ஆகிய இருவரும் இவருக்கு கால்ஷீட் கொடுத்துள்ளனர். ரஜினிக்காக ராஜாதி ராஜா இயக்கும் வாய்ப்பும், விஜயகாந்த் நடிப்பில் உருவாகும் கோயில் காளை திரைப்படத்தை இயக்கித் தயாரிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
அதில் கோயில் காளை படத்தை இயக்கி தயாரிப்பதென முடிவு செய்துள்ளார் கங்கை அமரன். அந்த படத்துக்காக விஜயகாந்த் கம்மியான சம்பளம் வாங்கிக்கொண்டாராம். ஆனால் அவரோடு பல படங்களில் சேர்ந்து வேலை செய்த கவுண்டமணி தன்னுடைய சம்பள பாக்கி கொடுத்தால் மட்டுமே டப்பிங் பேசி தருவேன் என்று சொல்லிவிட்டாராம்.
இதைக் கேட்டு தான் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கங்கை அமரன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “நம்மால் வளர்ந்து வந்தவர். எத்தனை படங்களில் அவரோடு இணைந்து பணியாற்றியுள்ளோம், எப்படி நட்பாக பழகினோம். இப்படி சொல்லிவிட்டாரே என எனக்கு கஷ்டமாகி விட்டது. அப்புறம் எப்படியோ பணத்தை ஏற்பாடு செய்து அவருக்குக் கொடுத்தேன். அதன் பிறகுதான் டப்பிங் பேசினார். அவர் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காமல் நான் டப்பிங்குக்கே செல்லவில்லை” என பல ஆண்டுகால வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…