#image_title
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மாசாணி அம்மன் திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருப்பார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர் ஜே பாலாஜி நயன்தாரா, சுருதி வெங்கட், ஊர்வசி மற்றும் மவுலி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.
கடவுளின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு சரியான பாடம் சொல்லிக் கொடுக்கும் வகையில் இந்த திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி கதையாக இயக்கியிருப்பார். இதைத்தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி ஏகப்பட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து ரன் பேபி ரன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
பின்னர் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் பெரிய அளவு ஹிட்டுக் கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் அம்மன் கதையை படமாக்கி வெற்றி பெறலாம் என்ற யோசனையுடன் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாவது பாகமான மாசாணி அம்மன் என்கின்ற டைட்டிலுடன் புதிய திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கின்றார்.
முதலில் இந்த திரைப்படத்தின் நயன்தாராவுக்கு பதிலாக திரிசாவை அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க போகிறார் என தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது திரிஷாவும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது இல்லையாம். அதற்கு பதிலாக ஆர்.ஜே பாலாஜி தன்னுடைய சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
கூடிய விரைவில் எந்த நடிகை இந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பை பாலாஜி வெளியிடுவார் என்று கூறி வருகிறார்கள். ஏற்கனவே சமந்தா தமிழ் சினிமாவில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து எந்த தமிழ் திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் அதாவது அவர் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…
குஜராத் மாநிலம் சூரத்தின் உத்னா பகுதியில், அக்டோபர் 24 அன்று 23 வயதான காஜல் என்ற பெண், அவரது முன்னாள்…
ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…
தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…
மத்தியப் பிரதேச மாநிலம் பத்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அக்ஷித், வெறும் 200 ரூபாய் மதிப்புள்ள அதிர்ஷ்டக்…
சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…