தளபதியின் GOAT படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக நடிக்க விருந்தது இந்த பிரபல நடிகர் தானாம்.. வெங்கட் பிரபு சொன்ன தகவல்..!!

By Priya Ram on செப்டம்பர் 13, 2024

Spread the love

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். விஜய் தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார்.

   

கோட் படத்தில் சிவகார்த்திகேயன் காட்சி!! பாடம் எடுத்த ப்ளூ சட்டை மாறன்.. - விடுப்பு.கொம்

 

கோட் திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். இது மட்டும் இல்லாமல் த்ரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் கேமியோ ரோலில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளனர். மட்ட பாடலுக்கு திரிசா விஜயுடன் இணைந்து குத்தாட்டம் போடுகிறார்.

இலங்கை பெண்ணுடன் திருமணம்..? சிம்பு தரப்பு விளக்கம்.. | Tamil cinema simbu getting engaged to a srilankan girl news fake

இந்த நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்திற்கு முதலில் சிம்பு வைத்தான் நடிக்க வைக்கலாம் என நினைத்துள்ளார். அதனை சிம்புவிடம் சென்று கூறியுள்ளனர். ஆனால் சிம்பு மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் அவரால் கோட் திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு தான் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்து அவரிடம் சென்று பேசி சம்மதிக்க வைத்ததாக வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Simbu, Sivakarthikeyan in Thalapathy 68?: தளபதி 68 படத்தில் விஜய்யுடன் நடிக்கும் சிம்பு, சிவகார்த்திகேயன், ஜூனியர் என்.டி.ஆர்.?-Samayam Tamil

author avatar
Priya Ram