என் வாழ்க்கையை மாற்றியவர் இவர்தான்… மனம்திறந்த ராதிகா சரத்குமார்…

By admin on புரட்டாதி 13, 2024

Spread the love

பழம்பெறும் மூத்த நடிகர் புகழ் பெற்ற நடிகர் எம் ஆர் ராதா அவர்களின் மகள் தான் ராதிகா சரத்குமார். நடிகை நிரோஷா இவரது தங்கை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ராதா மோகன் இவரது சகோதரர் மற்றும் நடிகர் ராதாரவி இவரின் ஒன்றுவிட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகை ஆவார்.

   

1980 90களில் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா சரத்குமார் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் பாரதிராஜா இவரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், மோகன் போன்ற கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமானவர் ராதிகா. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார் ராதிகா.

   

1980 90களில் கதாநாயகியாகவும் 1990க்கு பிற்பகுதியில் லட்சுமி ஸ்ரீவித்யா ஆகியோருடன் தாயார் மற்றும் முதுமையான கதாபாத்திரம் குணசத்திர கதாபாத்திரம் என திறம்பட நடித்து பிரபலமானவர் ராதிகா சரத்குமார். 2000களின் பிற்பகுதியில் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் நுழைந்தார் ராதிகா சரத்குமார்.

 

ராடன் மீடியா என்ற ப்ரடக்ஷன் நிறுவனத்தை ஆரம்பித்து சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி போன்ற மெகா ஹிட் தொடர்களில் நடித்து பெண்களின் ஆதரவை பெற்றவர் ராதிகா சரத்குமார். அந்த காலகட்டத்தில் சித்தி தொடர் மிகப் பிரபலமாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணியில் கலந்து கொண்ட ராதிகா சரத்குமார் சினிமா அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொள்ளும் போது எனக்கு சினிமாவிற்கு வரணும்னு ஐடியாவே இல்ல. அப்பதான் ஒரு நாள் பாரதிராஜா சார் எங்க வீட்டுக்கு வரும்போது என்ன பாத்து சினிமால நடிக்க கேட்டாரு. அவர்தான் சினிமாவில் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் அறிமுகப்படுத்தி இன்னைக்கு நான் இந்த நிலைமையில இருக்கேன் என்னோட வாழ்க்கையே மாறி இருக்குன்னா அதுக்கு காரணம் பாரதிராஜா அவர்கள் தான் என்று கூறியிருக்கிறார் ராதிகா சரத்குமார்.