சிம்பு எனப்படும் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகராவார். இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபல இயக்குனர் மற்றும் நடிகராகவர். 1980 களில் தனது தந்தை இயக்கிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு.

2002 ஆம் ஆண்டு தனது தந்தை டி ராஜேந்தர் இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வல்லவன் மன்மதன் கோவில் சிலம்பாட்டம் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் சிம்பு.
சில வருடங்களாக சிம்பு மிகவும் எடை கூடி இருந்தார். அதற்காக மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வருடங்கள் போராடி எடையை தற்போது குறைத்து இருக்கிறார். இதை ஒரு பயண வீடியோவாக சிம்பு வெளியிட்டு இருந்தார். அது ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. அதிலிருந்து இவரை Atman என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர். சிம்பு ஒரு நல்ல நடிகன் மட்டுமல்ல சிறப்பாக பாடக்கூடியவர் மற்றும் நடன கலைஞர் ஆவார்.

தென்னிந்திய சினிமாவில் பல பாடல்களை பாடி இருக்கிறார் சிம்பு. அதனால் தற்போது சிங்கப்பூரில் நடந்த யுவனின் இசை கச்சேரியில் கலந்து கொண்ட சிம்பு ஆடிக்கொண்டே பாட்டு பாடியது ரசிகர்களை செம்ம Vibe ஆக ஆக்கி நன்றாக Enjoy செய்தனர். அந்த கான்செர்ட்க்கு சிம்புவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் மற்ற நாடுகளுக்கும் சிம்புவை தனியாக கான்செர்ட் நடத்தும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்களாம். இதனால் யுவன் கான்செர்ட்டில் கலந்து கொண்டதற்காக சிம்புவுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
