அண்ணே உங்க ஆசையை நிறைவேத்திட்டேன்… இளையராஜா சொன்ன விஷயம்… மகிழ்ச்சியில் ஜேசுதாஸ்..!

By Soundarya on மார்கழி 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. பாலாவின் தாரை தப்பட்டை படம் இளையராஜாவின் இசையில் வெளியான ஆயிரம் ஆவது படம்.

   

தொடர்ந்து சினிமாவில் இசையமைப்பது மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, இசைக்கச்சேரி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஆக்டிவாக உள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்திற்கு இசையமைத்து பாடல்களை ஹிட் ஆக்கினார். விடுதலைஇரண்டாம் பக்கத்திற்கு. சூப்பர் பாடல்களை கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இளையராஜா மலையாளத்தில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

   

 

அதில் ஜேசுதாஸ் அண்ணன் என்னிடம் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவோடு ஒரு சிம்பொனி இசை கம்போஸ் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நான் நிறைய படங்களுக்கு இசையமைத்து விட்டேன் . இப்பொழுது சிம்பொனியும் இசையமைத்துவிட்டேன். அண்ணன் ஜேசுதாஸ் கூறிய வேலை முடிந்து விட்டது.

சிம்பொனிக்காக முழுமையாக எழுதி அதை இசையமைத்து வைத்திருக்கிறேன். நீங்கள் கூறிய வேலை கடவுளின் அனுக்கிரகத்தோடு முடிந்துள்ளது என்று கூறியுள்ளார். ஏற்கனவே திருவாசகம் உள்ளிட்ட வெற்றிக்கு இசையமைத்த இளையராஜா 1993 ஆம் வருடம் லண்டனில் சிம்போனி ஒன்றை இசை அமைத்தார். அது வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.