sim card

போனில் சொருகப்படும் சிம்கார்டு ஒருமுனையில் வெட்டப்பட்டு இருப்பது ஏன்? காரணம் தெரியுமா உங்களுக்கு?

By Elango on மார்கழி 5, 2025

Spread the love

நாம் பயன்படுத்தும் செல்போனில் உயிராக இருப்பது பேட்டரி என்றாலும் போனில் சிம் கார்டு இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். சிம்கார்டு இல்லை என்றால் எந்த ஒரு போனையும் பயன்படுத்த முடியாது. ஆனால் சிம்கார்டு செவ்வக வடிவத்தில் காணப்பட்டாலும் அதன் ஒரு முனை மட்டும் சற்று வெட்டப்பட்டு இருக்கும். இதுகுறித்து பலருக்கும் காரணம் தெரியாது. நாம் ஒரு பொருளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் அதன் வடிவமைப்புக்கு பின்னே இருக்கும் உண்மையை அறிந்து கொள்ள முடிவதில்லை.

ஆரம்பத்தில் சிம் கார்டுகள் செவ்வக வடிவில் தான் இருந்துள்ளது. அதனால் சிம் கார்டை போனுக்குள் பொருத்துவதில் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் தலைகீழாக சொருகுவதா அல்லது நேராக சொருக வேண்டுமா என்பதில் குழப்பம் நீடித்தது. அது மட்டுமின்றி எந்த பக்கத்தினை உள்ளே வைக்க வேண்டும் என்பதும் தெரியாமல் குழப்பம் அடைந்தனர். இதனால் தலைகீழாக சொருகி வைக்கப்படும் சிம்கார்டு வேலை செய்யாமலும் மொபைலில் நெட்வொர்க் கிடைக்காமல் இருக்கும்.

   

இதனால் சிம் கார்டு சேதம் அடையவும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த குழப்பங்களை தீர்ப்பதற்கு தான், சரியான முறையில் சிம்கார்டு செல்போனில் போடப்பட்டுள்ளதை உறுதி செய்வதற்காக இவ்வாறு ஒரு முனையை வெட்டும் யோசனை வந்ததாக கூறப்படுகிறது. இந்த முனையானது மொபைல் ஸ்லாட்டில் உள்ள வடிவத்துடன் ஒத்துப் போவதால் தவறான சிம்கார்டு சொருகாமல் சரியாக சொருகி பயன்படுத்துகிறார்கள்.