சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நாதஸ்வரம் சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அதன் பிறகு ஒரு சில மாதங்களில் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த பிறகு ஸ்ருதி தன்னுடைய கணவரோடு எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்துக்கு கார்டியாக அரெஸ்ட் என்று சொல்லப்படும் இருதயம் முடக்கம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி சின்னத்திரை திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் ஸ்ருதியின் கணவர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் கணவர் இறந்த சோகத்தில் தற்போது சுருதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
