நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ராஜசபா எம்பி ஆகவும் பதவியேற்று பிஸியாக உள்ளார். கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பேட்டியில் தனது தந்தை குறித்து கூறியுள்ளார்.
அதில் தக் லைப் படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனின் மனநிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன் படத்தின் தோல்வி எனது தந்தையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
அவர் சம்பாதிக்கும் பணத்தில் கார் வாங்கவோ வீடு வாங்கவோ விரும்பவில்லை எனவும், சம்பாதிக்கும் பணத்தை சினிமாவில் தன போடுகிறார் எனவும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். கூலி படத்தில் நடித்திருந்த சுருதிஹாசன் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் ட்ரெயின் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஸ்ருதிஹாசன் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
