நீங்கள் தனியார் துறையில் பணிபுரியும் பொழுது, வருங்கால வைப்பு நிதி அளிக்கப்பட்டால், இந்த பணம் உங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் (PF) டெபாசிட் செய்யப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள், டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை அடிக்கடி எடுத்தால், நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.
பணம் எடுப்பதினால் வரும் தீமைகள்
- PF யில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை, கூட்டு வட்டி வடிவில் வருமானம் பெறுவதால், அதனை அடிக்கடி திரும்பப் பெற்றால் வட்டியின் பலனை பெற முடியாது.
- திருமணம், குழந்தைகளின் கல்வி போன்ற சில காரணங்களுக்காக மூன்று முறை மட்டுமே இந்தத் தொகையை எடுக்க இயலும், மீறினால் சிக்கல் ஏற்படும்.
- PF பணத்தை 5 ஆண்டுகளுக்கு முன் பெற்றால், வரி செலுத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்குப் பின் வரி விலக்கு அளிக்கப்படும். மேலும் ரூ. 50,000 குறைவான பணம் இருந்தால், TDS கழிக்கப்படாது.
- வருடத்திற்கு பலமுறை PF பணத்தை பெற்றால், மருத்துவ அவசர நிலை அல்லது தேவையின் போது PF பணம் காலியாவதோடு, அதன் நோக்கத்தையும் தோற்கடிக்கும்.
PF கணக்கிலிருந்து, இரு வழிகளில் பணத்தை எடுக்கலாம். அதில் பாதியை வேலையில் இருக்கும் பொழுதும், மீதி பணத்தை வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் பெறலாம்.
