இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல சகோதரி நடிகைகள் யாருன்னு தெரியுதா…? கண்டுபிடிங்க பாப்போம்…!

By Begam on ஐப்பசி 9, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் உலக நாயகன் எனவும் தனது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தற்பொழுது நடிகர் கமலஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

   

நடிகர் கமலஹாசன் 1978ல் பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 1988 விவாகரத்து பெற்றனர். இதைத் தொடர்ந்து கமலஹாசன் சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

   

 

ஸ்ருதிஹாசன் தந்தையை போலவே திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார். மேலும் அவர் தற்பொழுது சாந்தனு ஹசாரிக்கா என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தும் வருகிறார். இந்நிலையில் ஸுருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் டீன் ஏஜில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…