பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ராவை வெளுத்து வாங்கிய… நடிகை வனிதா மகள் ஜோவிகாவின் unseen புகைப்படங்கள்…!

By Begam on ஐப்பசி 9, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பிரம்மாண்டமாக 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

   

வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணமே கேப்டனுக்கான டாஸ்க், ஆறு பேர் வெளியேற்றம், அதிரடி நாமினேஷன் என்று இந்த சீசன் ஆரம்பத்திலேயே எக்ஸ்பிரஸ் வேகத்தில் டேக் ஆஃப் ஆகிவிட்டது.

   

 

சின்ன வீட்டில், அதாவது சின்ன பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரத் தண்டனைக் காலத்திற்குச் செல்ல ஆறு பேர் தேர்வானார்கள்.

அங்கு வசதிகள் குறைவு. ஆறுதலாகச் சின்ன வீட்டில் ஒரு ஜாலியான தம்பி பிக் பாஸ் உண்டு. சின்ன வீட்டில் இருப்பவர்கள், பெரிய வீட்டில் இருப்பவர்களுக்குப் பல பணிகளைச் செய்து தர வேண்டும் என்பது தொடங்கிப் பல விதிமுறைகள் வெளியாகின. மேலும் இந்த சீசனில் புதிய மாற்றங்களும் இருந்தன.

இந்த சீசனில் பங்குபெற்றுள்ள நடிகை விசித்ரா ஆரம்பம் முதலே தேவையில்லாத விஷயங்களை பற்றி அதிகம் பேசி வருகிறார். குறிப்பாக பெண்களின் ஆடை விஷயங்களை பற்றி பேசியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

ஆனால் இவர் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவிடம் படிப்பை பற்றி பேசிய விஷயம் பலரது பாராட்டையும் பெற்றது. நடிகை வனிதாவின் மகளான ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே மிகப்பெரிய சண்டையே நடந்தது.

இந்த விஷயத்தில் கமலஹாசன் விசித்ராவுக்கே சப்போர்ட் செய்து அடிப்படை கல்வி மிக அவசியம் என்பதை ஜோவிகாவுக்கு உணர்த்தினார்.

ஆனால் தன் மகளுக்கு ஆதரவாக இணையத்தில் பலவேறு பதிவுகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் நடிகை வனிதா.

அந்தவகையில் தற்பொழுது இவர் தனது மகளின் சிறுவயது புகைப்படங்களை பதிவிட்டு, ‘dedicated to all daughters like mothers to their moms’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.