#image_title
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.
அதே போல எம் ஜி ஆர் தன்னுடைய பிம்பத்தை பேணுவதில் அதிக அக்கறை கொண்டிருப்பார். தன் படங்களில் சிகரெட், மது குடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டார். முதியவர்களை அவமரியாதை செய்யும் விதமாக வசனம் பேசமாட்டார். நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்கமாட்டார். இதெல்லாம் சேர்ந்துதான் அவர் அரசியலில் வெற்றி பெற ஒரு காரணமாக அமைந்தன.
அரசியலுக்கு வந்த பின்னர் தன்னுடைய வயதான தொற்றத்தை மறைக்க தலையில் ஒரு தொப்பி, கருப்பு கண்ணாடி, முழுக்கை சட்டை என மெய்டெய்ன் செய்ய ஆரம்பித்தார். அதனால் அதுவே அவரது அடையாளமாக இன்றுவரை இருக்கின்றன. அவரின் இறுதி ஊர்வலத்தில் கூட அவரை அதுபோல அலங்கரித்துதான் வைத்திருந்தார்கள்.
இந்நிலையில் தன்னுடைய நாயகன் படம் ஆஸ்கர் வரை செல்ல தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் அதை சொல்லி அப்போதைய முதல்வர் எம் ஜி ஆரிடம் வாழ்த்து பெறலாம் என தன் மனைவி சரிகா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஸ்ருதிஹாசனிடம் ‘எம் ஜி ஆர் வந்ததும் அவருக்கு வணக்கம் வைத்து பேசவேண்டும்’ என பயிற்சி எல்லாம் அளித்து அழைத்து சென்றாராம்.
அப்போது எம் ஜி ஆர் தன்னுடைய மேக்கப் எல்லாம் வழுக்கை தலையோடு வந்துள்ளார். கமல் எழுந்து வணக்கம் சொல்ல, சிறு குழந்தையான ஸ்ருதிஹாசன் அவரைக் கண்டுகொள்ளவே இல்லையாம். இதைப் பார்த்து நெளிந்த கமல் “உங்களிடம் எப்படி பேசவேண்டும் என பயிற்சி எல்லாம் கொடுத்து அழைத்து வந்தேன்’ எனக் கூறியுள்ளார்.
அதைக் கேட்டு உள்ளே சென்ற எம் ஜி ஆர் தொப்பி, கண்ணாடி எல்லாம் அணிந்து வந்துள்ளார். அப்போது அவரைப் பார்த்ததும் ஸ்ருதி “வணக்கம் ஐயா” என்று சொல்லி பேசியுள்ளார். அப்போது எம்ஜி ஆர் சிரித்து குழந்தைக்கு ‘இந்த எம் ஜி ஆரைதான் தெரியும்’ எனக் கூறியுள்ளார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…