#image_title
பருத்திவீரன் படத்தின் பாடல் காட்சி ஒலிப்பதிவின் போது நடந்த ஒரு சம்பவத்தை இயக்குநர் அமீர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துக்கொண்டார். அந்த பாடலை பாட வந்தவர் ஸ்ரேயா கோஷல். பருத்திவீரன் படத்தில், கதாநாயகன் கார்த்தி (பருத்திவீரன்) மீது ஆசைப்படும் பிரியாமணி (முத்தழகு) பாடும் பாடல் அது. இதுகுறித்து அமீர் அந்த நேர்காணலில் கூறியதாவது, கல்லுக்குள்ள தேரை போல, கலைஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா என்று அந்த பாடல் வரிகள் வரும். இந்த பாட்டை அவ பாடறா. அவளுக்கு தகுந்த மாதிரி பாடணும். நீ ஏதோ அண்ணா யுனிவர்சிடில படிச்சிட்டு வந்து பாடற மாதிரி பாடறியே. அது எனக்கு வேணாமுன்னு சொன்னேன். அதை புரிஞ்சுக்கிட்டு பாடுங்கன்னு சொன்னேன். ஒரு கட்டத்துல அந்த பொண்ணு அழுதிடுச்சு. இன்ஜினியர் எல்லாம் பதறிட்டாங்க.
சார், என்ன சார்ன்னு என்கிட்ட வந்தாங்க. என்னை என்ன சார் பண்ண சொல்றாங்க. நான் ஒண்ணுமே சொல்லல. இதுதான் வேணுமுன்னு நான் சொன்னேன். உடனே அவங்க அம்மா வந்துட்டாங்க. நீங்க இவ்வளவு சிரமப்பட வேண்டியது இல்ல. பேசின பணத்தை கொடுத்துடலாம். அவங்க ஊருக்கு போகட்டும். இந்த பாட்டை வேற பாடகியை வெச்சு எடுத்துக்கறேன்னு சொல்லிட்டேன். இது அந்த பொண்ணுக்கு பெரிய ஒரு டிரிக்கர் ஆயிடுச்சு.
அது எப்படி என்னை கூப்பிட்டு, வேற சிங்கரை பாட வைக்கறதுன்னு சொல்லலாமுன்னு தோணியிருக்கு. எதுக்கும் ஒரு நாள் டைம் கொடுங்கன்னு சொன்னாங்க. ஆக்சுவலா அவங்க அன்னிக்கு நைட் ஊருக்கு போறது. ஆனா மும்பை போகாம அன்னைக்கு ஒரு நாள் ஸ்டே பண்ணி மறுநாள் வந்து பாடுச்சு.
அதுதான் பைனல் வெர்சன். அப்புறம் பாடீட்டு வந்து என்கிட்ட சொல்லிச்சு. இது எனக்கு ரொம்ப புதுசா இருக்குது இதுல என்னோட ஸ்டைலே இல்லை என்றது. இதைத்தானே நானும் கேட்டேன். உங்கள் ஸ்டைல் வேணாமுன்னுதானே சொன்னேன் என்று ஸ்ரேயா கோஷலிடம் பேசியதாக இயக்குநர் அமீர் கூறியிருக்கிறார். இன்று ஸ்ரேயா கோஷல் பின்னணி பாடகிகளில் மிக முக்கியமான முன்னணி பாடகியாக இருக்கிறார். பல நூறு ஹிட் பாடல்களை தந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…