மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்…. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி…. அரசு அதிரடி உத்தரவு…!

By Nanthini on கார்த்திகை 2, 2026

Spread the love

தமிழ்நாடு முழுவதும் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளும் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும் என்று மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. காலி மதுப் பாட்டில்களை திரும்பப் பெறும் புதிய திட்டத்தை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகக் கடைகள் திறக்கப்படுவதில் தாமதம் அல்லது தடை ஏற்படலாம் என்பதால், நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஒருவேளை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கடையைத் திறக்க மறுத்தால், மாற்று ஏற்பாடாகத் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு உடனடியாகக் கடைகளைத் திறக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ஊழியர்களின் போராட்டங்களை எதிர்கொள்ளும் வகையிலும், விற்பனை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் நிர்வாகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.