மனசாட்சியே இல்லையா…? “4 லிஃப்ட் இருக்கு…” 21 மாடிகளுக்கு செங்கற்களை தலையில் சுமந்து சென்ற தொழிலாளி… மனிதநேயமற்ற செயல்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2026

Spread the love

அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் 4 லிஃப்ட்டுகள் வசதி இருந்தபோதிலும், கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் தொழிலாளி ஒருவர் 20 கிலோ செங்கற்களைத் தலையில் சுமந்தபடி 21 மாடிகள் படிக்கட்டில் ஏறிச் சென்ற சம்பவம் இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4 லிஃப்ட்டுகள் இயங்கி வரும் நிலையில், கட்டுமானப் பணிக்காகச் செங்கற்களை எடுத்து வந்த தொழிலாளிக்கு லிஃப்ட்டைப் பயன்படுத்த அங்கிருந்த நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த தொழிலாளி 20 கிலோ எடையுள்ள செங்கல் சுமையைத் தனது தலையில் சுமந்துகொண்டு 21 மாடிகள் வரை படிக்கட்டுகள் வழியாகவே ஏறிச் சென்றுள்ளார்.

   

இதைப் பார்த்த குடியிருப்புவாசி ஒருவர், “எங்கள் கட்டிடத்தில் 4 லிஃப்ட்டுகள் உள்ளன, ஆனால் இந்த ஏழை தொழிலாளிக்கு லிஃப்ட் மறுக்கப்பட்டு 21 மாடிகள் நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” எனக் கூறி வீடியோவைப் படம்பிடித்துப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, “இது முற்றிலும் மனிதநேயமற்ற கொடூரம்” என்றும், உழைக்கும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளும் உரிய மரியாதையும் அளிக்கப்பட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.