மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நடந்த ஒரு வினோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வீர்பூர் அணையில் தண்ணீரில் மிதந்த ஒருவரை பார்த்த உள்ளூர் வாசிகள் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக நினைத்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிர்வாய் காவல் நிலைய போலீசார் சம்பாவ இடத்திற்கு விரைந்து சென்று அணையின் அருகே ஒரு வாலிபரின் உடல் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருப்பதையும் அவருடைய முகம் மட்டும் வெளியே தெரிவதையும் கண்டனர்.
உடலை மீட்பதற்காக ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றது. போலீசார் அந்த இளைஞரை வெளியே எடுக்க முன்னோக்கி நகர்ந்ததும் இறந்து விட்டதாக நினைத்த அந்த நபர் திடீரென்று எழுந்து ஓட தொடங்கினார். இந்த காட்சி அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் போலீசுக்கும் அதிர்ச்சி கொடுத்தது. அந்த நபர் ஒரு இன்ஸ்டாகிராம் ரீலுக்காக இந்த செயலை செய்தது பிறகு தெரிய வந்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Reel का जुनून, वीरपुर बांध में 20 मिनट बिना हिले तैरता रहा युवक
पुलिस के पहुंचते ही दौड़ लगाकर भागा, 30 वर्षीय युवक आरोन का निवासी है, पुलिस ने डांटकर – समझाकर छोड़ा#Gwalior #Reels pic.twitter.com/ouXIWpHWUu
— MP Breaking News (@mpbreakingnews) September 8, 2025
