தமிழகத்தில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 15 இன்று தொடங்கி வைக்கிறார். 18 வயது நிறைவடையும் வரை இந்த உதவி தொகை வழங்கப்படுவதோடு அவர்களது உயர் கல்விக்கும் அரசு உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் பெற்றோரை இழந்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு லேப்டாப்புகளும் வழங்கப்பட உள்ளன சமூக நலத்துறை மூலம் மாநிலம் முழுவதும் மூன்று லட்சம் விண்ணப்பங்கள் அனுப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகையுடன் குழந்தைகளின் அனைத்து விதமான கல்வி செலவுகளையும் ஏற்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
