சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் பலரும் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்களை பதிவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக லைக் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் எவ்வளவு ஆபத்தான செயல்களையும் செய்வதற்கு தயங்குவதில்லை. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளத்தில் லைக்ஸ் மற்றும் வியூஸ் பெறுவது பெரிய சாதனையாக கருதும் இன்றைய இளம் தலைமுறையினர் அதிகரித்து வரும் நிலையில் ஒரு பெண் தன்னுடைய சேலையின் ஒரு பகுதியை தானே தீ வைத்து ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றுள்ளார்.
தீ பற்றி எரிந்து கொண்டிருந்த போதும் அவர் டான்ஸ் ஆடி கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இது சாகச முயற்சியாக தோன்றினாலும் சில வினாடிகளில் தீ வேகமாக பரவியதால் நிலைமை கைமிறியது. பதற்றத்தில் அந்த பெண் உடனடியாக சேலையை அவிழ்த்து தன்னை காப்பாற்றிக்கொண்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ குடியிருப்பு கட்டிடத்தின் இரண்டாவது பிரிவில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென பயங்கர தீ…
அமெரிக்க பெடரல் வங்கியின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகளால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென 2,493…
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் மாணவர்களை வகுப்பறையை…
அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி,…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…
மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல்…