பகீர்… முன்விரோதத்தில் திட்டமிட்டு நடந்த கொலையா?… சாலை விபத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை… நடுங்கவைக்கும் சிசிடிவி காட்சி…!

Spread the love

த்ரிச்சூர் புதுக்காட்டில் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் பலியான சம்பவம், சாதாரண சாலை விபத்து அல்ல என்றும் அது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். பட்டாம்பியைச் சேர்ந்த ரிஜாஸ் என்ற இளைஞர் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த விபத்தில் உயிரிழந்தார். விபத்து நடப்பதற்கு சுமார் 10 நிமிடங்களுக்கு முன்பு, காரில் வந்தவர்களுக்கும் ரிஜாஸ் மற்றும் அவருடன் பயணித்த பெண் தோழிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் காரில் இருந்தவர்கள் வேண்டுமென்றே மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக ரிஜாஸின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

காரில் பயணித்தவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் சம்பவத்தின் போது மதுபோதையில் இருந்ததை காவல்துறை கண்டறிந்துள்ளதாகவும் ரிஜாஸின் தந்தை தெரிவித்துள்ளார். ரிஜாஸுடன் பயணித்த பெண் தோழி அளித்த தகவலின் பேரிலேயே, விபத்துக்கு முன் நடந்த தகராறு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தக் கோரி, குடும்பத்தினர் த்ரிச்சூர் கிராமப்புற காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

https://twitter.com/HateDetectors/status/2085271259693400514/video/1

இச்சம்பவம் தொடர்பான டேஷ்கேம் மற்றும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், குடும்பத்தினர் வைக்கும் குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. உயிரிழப்பிற்கான உண்மையான காரணத்தை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Swetha

Recent Posts

கிசுகிசு விற்று 2 வீடுகள்!.. அடுத்தவர் ரகசியமே வருமானம்…உலகத்தையே உலுக்கிய நூதன பிசினஸ்…கொலம்பியா பாட்டியின் ஷாக்கிங் பேட்டி…!!

அடுத்தவர்களைப் பற்றிய ரகசியங்களை அறிந்துகொள்வதிலும், அதனை கிசுகிசுவாகப் பேசுவதிலும் மனிதர்களுக்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வம் உண்டு. நாமெல்லாம் இதுபோன்ற…

6 minutes ago

ஷாக்… வேனில் உங்களை யார் போகச் சொன்னது?… சேகர்பாபுவை ஆவேசமாக… வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்…!

உதயநிதி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக மூத்த தலைவர்களான சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரை மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கடிந்து கொண்டதாகத்…

7 minutes ago

அடடே… டொராண்டோவில் பாத்திரம் கழுவ எவ்ளோ தருவாங்க?… கிண்டல் கேள்விக்கு சாதுரிய… மாஸ் பதிலடி கொடுத்த இந்தியப் பெண்… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ…!

கனடாவின் டொராண்டோ நகரில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேச்சல் என்ற இந்தியப் பெண்ணுக்குச் சமூக…

21 minutes ago

எங்களை ரோட்ல நிறுத்திட்டீங்க!…’நாம் தமிழர்’ பின்னடைவு குறித்து உருக்கமான பேச்சு…மேடையில் வெடித்த சீமான் கோபம்…!!

திரைத்துறையில் இயக்குநராகத் தடம் பதித்து, பின்னர் மாற்று அரசியல் முழக்கத்தோடு 'நாம் தமிழர்' கட்சியை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கியவர்…

24 minutes ago

அடச்சீ… ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்… அலறல் சத்தம்… விழித்துக்கொண்ட ஊழியர்கள்… கொல்கத்தாவில் பரபரப்பு…!!

மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, ரெயில் கால்சினி நகரம் அருகே வந்தபோது ஆளில்லாத…

40 minutes ago