“நான் என்னமோ நினைச்சேன்… இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா?”…. தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்…..!

Spread the love

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை, விஜய் தலைமையிலான ஆட்சியாளர்களின் இயலாமையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார். மாநிலத்தின் நிதிநிலையை ஒரே ஆண்டில் சீரமைக்க முடியாது என்றும், அதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், ஏற்கனவே தமிழகத்தின் கடன் சுமை ரூ. 10 லட்சம் கோடியைத் தாண்டி உயர்ந்து வரும் சூழலில், அடுத்த 50 ஆண்டுகள் ஆனாலும் இந்த கடனைக் குறைக்க முடியாது எனத் தெரிவித்தார். நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே ரூ. 22 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டிருப்பதையும், இந்த நிதியாண்டில் மேலும் ரூ. 1.22 லட்சம் கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளதாக நிதித்துறைச் செயலாளர் ஒப்புக்கொண்டதையும் சுட்டிக்காட்டி அவர் அரசின் நிதி நிர்வாகத்தைக் விமர்சித்தார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட தொலைநோக்குத் திட்டங்களையே த.வெ.க அரசு பெயர் மாற்றம் செய்து கின்னஸ் சாதனை படைத்திருப்பதாக ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டினார். தாலிக்கு தங்கம், இலவச மிதிவண்டி, மடிக்கணினி, மகளிருக்கு ஆடுகள் வழங்குதல் மற்றும் விலையில்லா வீடுகள் போன்ற 2011-ஆம் ஆண்டிலேயே வெற்றிபெற்ற ‘அம்மா’வின் திட்டங்களையே புதிய பெயர்களில் த.வெ.க அரசு மறுஅறிமுகம் செய்துள்ளது. அதேவேளையில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ‘ஜென்-சி’ தலைமுறையின் ஆதரவால் அரியணை ஏறிய விஜய்க்கு கல்வியை விட வேறு முன்னுரிமைகள் இருப்பதாகச் சாடினார்.

கல்வித் துறை புறக்கணிக்கப்பட்ட அதே வேளையில், மதுபான விற்பனையை அதிகரிப்பதிலேயே அரசு தீவிர ஆர்வம் காட்டி வருவதாக முன்னாள் அமைச்சர் குற்றம்சாட்டினார். பட்ஜெட் தாக்கலுக்கு இணையான பரபரப்போடு, ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு செய்து டாஸ்மாக் கடைகளில் பெற்றுக்கொள்ளும் புதிய இணையதள சேவையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் இருப்பு விவரங்களை நுகர்வோர் நேரடியாக அறிய முடியும். 21 வயது நிறைவடைந்ததை உறுதிசெய்து, 5 முதல் 25 கி.மீ சுற்றளவில் உள்ள கடைகளில் விரும்பிய பிராண்டை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் இந்த வசதி, பட்ஜெட் அறிவிப்புகளை விட அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக, தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை என்பது ஆட்சியாளர்களின் அனுபவமின்மையையும் விழிபிதுங்கி நிற்கும் இயலாமையையும் வெளிப்படுத்தும் அறிக்கையாகவே அமைந்திருக்கிறது என்று ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தினார். மக்கள் நலனுக்கான புதிய தொலைநோக்குத் திட்டங்களோ அல்லது கடன் சுமையைக் குறைப்பதற்கான தெளிவான திட்டமிடலோ இல்லாமல், முந்தைய அதிமுக அரசின் திட்டங்களுக்குச் சாயம் பூசுவதிலும் டாஸ்மாக் விற்பனையை நவீனமயமாக்குவதிலும் மட்டுமே இந்த அரசு ஆர்வம் காட்டுவதாக அவர் நிறைவாகத் தெரிவித்தார்.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

11 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

12 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

12 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

12 மணத்தியாலங்கள் ago