தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள ‘D56’ திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு முதன்முறையாக இணைந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இத்தனை வருடங்களாக இருவரும் சேர்ந்து நடிக்காமல் இருந்ததற்கான காரணம் குறித்தும், படப்பிடிப்பில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி அளித்துள்ள பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக ‘படிக்காதவன்’ படத்தின் போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பனிப்போர் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே வடிவேலு அப்படத்திலிருந்து விலக நேர்ந்ததாகப் பிஸ்மி தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தப் படத்தின் மூலம் இவர்கள் இருவரும் முதன்முறையாகக் கைகோர்த்துள்ள நிலையில், இவர்களின் கூட்டணி திரையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
