தென்னிந்திய சினிமாவில் இருந்து பான் இந்தியா ஹீரோயினாக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனாவும், அவரது கணவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் பிரபல ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தங்கள் திருமணம் மற்றும் சமீபத்தில் வெளியான ‘ரணபாலி’ படம் குறித்த சுவாரஸ்யங்களை அவர்கள் பகிர்ந்துகொண்ட வேளையில், ‘அனிமல்’ படத்தில் தனது இந்தி உச்சரிப்பு வடமாநில ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டது குறித்து ராஷ்மிகா வெளிப்படையாகப் பேசியுள்ளார். “நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவள் என்பதால் எனது பேச்சில் அந்த உச்சரிப்பு இருப்பது இயல்புதான்; அதைத் தவறாகப் பார்ப்பது முட்டாள்தனம். விமர்சனங்களைக் கண்டு என்னை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
