68,00,000 கிலோ… ரூ.250 கோடி மதிப்பு…! திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் வெளியான ஷாக்கிங் தகவல்…!!

By Devi Ramu on கார்த்திகை 12, 2025

Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு தேவைப்பட்டால் பணம் செலுத்தி வாங்கலாம். இப்படி விற்கப்படும் லட்டுகளில் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டுகளில் நெய் கலப்படம் செய்யப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். நெய்யில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்ததாக தகவல்கள் வெளியானது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   

இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் உத்தரகாண்ட் பால் நிறுவனம் 2019-2024 வரை 68 லட்சம் கிலோ கலப்பட நெயை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கியது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.250 கோடி ஆகும்.

   

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரகாண்ட் நிறுவனத்தில் சோதனை செய்தனர். கலப்பட நெய் விநியோகத்தில் ஈடுபட்ட ரசாயன சப்ளையர் அஜய் குமார் கைது செய்யப்பட்டார். அஜய் குமார் லட்டு தயாரிக்க நெய்யில் மோனோடிகிளிசரைடுகள், அசிட்டிக் அமில எஸ்டர் போன்ற ரசாயனங்கள் சப்ளை செய்துள்ளார். 6இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.