குளிர்காலத்தில் வானிலை மாற்றம் காரணமாக இருமல், மார்பு சளி பொதுவாக வரும். இது உடல் கனம், எரிச்சல் ஏற்படுத்தும். மருந்துகள் உதவாவிட்டால் வீட்டு வைத்தியங்கள் மூலம் நிவாரணம் பெறலாம். அது பற்றி இந்த பதிவில் பாப்போம்.
- இஞ்சி, தேன் ஆகியவற்றை மென்று சாப்பிட உடனடி நிவாரணம் தரும்.
- மிளகு, தேன் ஆகியவற்றை காலை, மாலை உட்கொள்ள பிடிவாத இருமல் போகும்.
- அடிக்கடி வெதுவெதுப்பான நீர் தொடர்ந்து குடிக்க இருமல் குறையும். குளிர்ந்த நீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- துளசி, இஞ்சி நீரை காலை, மாலை சூடாக குடிக்க நெஞ்செரிச்சல் போகும்.
- சூடான நீரில் ஆவி பிடிக்க அல்லது குளித்தால் சளி இளகி சுவாசம் எளிதாகும்.
- உப்பை வெதுவெதுப்பான நீரில் போட்டு கொப்பளித்து வந்தால் தொண்டை எரிச்சல், சளி சரியாகும்.
சுய வைத்தியத்துக்கு முன் மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். மூச்சுத் திணறல், கடும் மார்பு வலி, காய்ச்சல், சளி நிறம் மாறினால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
