“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

By Swetha on ஆவணி 24, 2026

Spread the love

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். சரியான நேரம் அமையாததால் அந்தத் திட்டம் அப்போது தடைபட்டாலும், ஷாருக்கானின் இமாலய வளர்ச்சி மற்றும் அவருக்கும் ரசிகர்களுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பு தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஷாருக்கான் இந்தச் செய்தியைப் பார்த்துவிட்டுத் தன்னை மீண்டும் தொடர்புகொள்வாரா என்ற விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஆவணப்படம் எடுக்க விரும்பும் மற்றொரு முக்கியமான ஆளுமையாகப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கெவின் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் மோடியின் அரசியல் அடையாளத்தைக் கடந்து, அவரது தனிப்பட்ட மனிதப் பக்கத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் படம் உருவாக்கத் தனக்கு ஆர்வம் இருப்பதாகக் கூறியுள்ளார். இருப்பினும், இத்தகைய ஆவணப்படத்திற்குப் பிரதமர் மோடி சம்மதிப்பாரா என்பது சந்தேகமே என்பதையும் அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

   

தற்போது மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் மேலாளர் பெப் கார்டியோலாவைப் பற்றிய 4 பாகங்கள் கொண்ட ஆவணத் தொடரிலும், கால் காடோட் நடிக்கும் ‘தி ரன்னர்’ திரைப்படத்திலும் கெவின் பணியாற்றி வருகிறார். ஷாருக்கான் மற்றும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்தியாவின் இரு முக்கிய ஆளுமைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆஸ்கர் இயக்குநரின் ஆசை திரை உலகில் கவனத்தைப் பெற்றுள்ளது.