ரசிகருக்கு கைகொடுக்கும்போது… என் கையில் பிளேடால் கிழிச்சிட்டாங்க… அதிர்ச்சி தகவலை சொன்ன AK…!!

By Soundarya on கார்த்திகை 1, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்தான் அஜித். தனக்கென்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய வைத்திருக்கும் அஜித் நடிப்பு மட்டுமல்லாமல் துப்பாக்கி சூடு, கார் மற்றும் பைக் ரேஸ் என பல போட்டிகளில் தன்னை நிரூபித்து வருகின்றார். துபாயில் நடந்த கார் ரேஸ் பந்தயத்திற்காக தனி அணியை உருவாக்கிய அஜித் அந்த போட்டியில் பங்கேற்ற இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார். இதனிடையே இந்த ஆண்டில் இவருடைய நடிப்பில் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் வெளியானது.

இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் உள்ளது. சினிமாவை கடந்து விளையாட்டுப் போட்டிகளில் அசத்தி வரும் அஜித் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்த சாதித்தார். அடுத்த ஆண்டு அபுதாபியில் நடைபெறும் கார்பந்தயப் போட்டியில் அஜித் தன்னுடைய ரேசிங் அணியுடன் கலந்து கொள்ள உள்ளார். இதனிடையே தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி ஆகிய கோவில்களில் அஜித் சமீபத்தில் தரிசனம் செய்திருந்தார்.

   

இந்நிலையில்,  பிரபல Youtube சேனல் ஒன்றுக்கு அஜித் அளித்த பேட்டி படு வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், கரூர் துயர சம்பவம், சினிமா, கார் ரேஸ், AK 64 அப்டேட், குடும்பம் குறித்து பல விஷயங்கள் மனம் திறந்து பேசியிருந்தார். அதில், 2005ஆம் ஆண்டு நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதாவது, ரசிகர்கள் கூட்டத்தில் ஒருமுறை ஒருவருக்கு கைகொடுக்கும்போது பிளேடு வைத்து என் கையில் கிழிக்கப்பட்டது. காரில் ஏறிய பிறகுதான் எனக்கு கையில் ரத்தம் வருகிறது என தெரிந்தது” என கூறியுள்ளார்.