உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், நீதிக்காகக் காவல் நிலையம் சென்ற பெண்ணிடம் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகப் புகார் அளிக்கச் சென்ற பெண்ணையே, சட்டத்தைக் காக்க வேண்டிய காவலரே வேட்டையாடிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, பரேலி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ் பாபு என்பவர், முதலில் அந்தப் பெண்ணிடம் ஆறுதலாகப் பேசுவது போல நடித்துள்ளார். பின்னர், “நீ ரொம்ப அழகா இருக்க!” என்று வர்ணித்ததோடு, தனியாகத் திருமணம் செய்து கொள்வதாகவும், நல்ல வேலை வாங்கித் தருவதாகவும் ஆசைவார்த்தைகளைக் கூறியுள்ளார். “உனக்காக என் மனைவியைக் கூட கைவிடத் தயாராக இருக்கிறேன்” என்று கூறி, கடந்த ஓராண்டாகத் திருமணப் பொய் வாக்குறுதிகளை அளித்து அந்தப் பெண்ணைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
நாளடைவில் சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ் பாபு தன்னை ஏமாற்றுவதையும், அச்சுறுத்துவதையும் உணர்ந்த அந்தப் பெண், இதற்கு ஒரு முடிவுகட்டத் துணிந்தார். நேற்று மாலை மாவட்ட எஸ்.எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்ற அவர், சப்-இன்ஸ்பெக்டரின் அத்துமீறல்கள் குறித்து அதிரடியாகப் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட நரேஷ் பாபு, அவருக்குத் துணையாக இருந்த அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் காவல்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட எஸ்.எஸ்.பி. உடனடியாக இந்தத் புகாரின் மீது தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், முதற்கட்ட அதிரடி நடவடிக்கையாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ் பாபுவை தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய உயர் அதிகாரியே இத்தகைய செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…