புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு செக் வைத்த விஜய்?… தவெகவில் இதுவரை யாருக்கும் தராத ‘அந்த’ பதவி… உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் அதிரடி திருப்பம்…!

Spread the love

தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டங்களில், தேர்தல் வியூக ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி பங்கேற்று வருவது ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் நண்பர் விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரின் இந்த ஆதிக்கத்தைக் கண்டித்து திமுக, அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்துப் புகார் அளித்துள்ளன. ஏற்கனவே விஜய்யின் தனிச்செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி நியமனத்திலேயே பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வரும் சூழலில், இவர்களின் தலையீடு தவெக அரசுக்கு கூடுதல் தலைவலியாக மாறியுள்ளது.

இந்நிலையில், திரைமறைவில் இருந்து செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, தற்போது தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்து நேரடி அரசியலில் ஈடுபட தீவிரமாகக் காய் நகர்த்தி வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் இதுவரை யாருக்கும் வழங்கப்படாத ‘துணைத் தலைவர்’ என்ற முக்கியப் பொறுப்பைக் கைப்பற்ற அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முதல்வர் விஜய் தற்போது முழுமையாக அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தி வருவதால், தனக்கு மிகவும் நம்பிக்கையான ஜான் ஆரோக்கியசாமியிடம் கட்சியின் முக்கியப் பொறுப்பை ஒப்படைத்தால் தவெகவின் உட்கட்டமைப்பு இன்னும் பலமாகும் என்று அவர் நம்புவதாகத் தெரிகிறது.

தற்போது தவெகவில் தலைவராக விஜய்யும், பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்தும் பொறுப்பில் உள்ள நிலையில், அவர்களுக்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனா தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளராகச் செயல்பட்டு வருகிறார். விஜய் ஆட்சிப் பணிகளில் பிஸியாக இருப்பதால், கட்சி விவகாரங்கள் பெரும்பாலும் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. இந்தச் சூழலில், ஜான் ஆரோக்கியசாமி கட்சிக்குள் நேரடியாக நுழைவதை ஆதவ் அர்ஜுனா தரப்பு சிறிதும் ரசிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே தவெகவிற்குள் பல்வேறு மட்டங்களில் உட்கட்சிப் பூசல் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், ஜான் ஆரோக்கியசாமியின் இந்தத் திடீர் என்ட்ரி கட்சியின் தலைமைப் பொறுப்பிலேயே கடுமையான அதிகார மோதலை உருவாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே ஜான் ஆரோக்கியசாமியை கட்சிக்குள் கொண்டு வந்து, முக்கியப் பொறுப்பில் அமர வைக்கும் அதிரடி முடிவை விஜய் எடுக்கக்கூடும் என்றே தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

அடப்பாவிகளா… இது என்னடா லவ்வர்ஸ்க்கு வந்த சோதனை?… கணவன்-மனைவி போல் நடித்து… கேரளாவில் கஞ்சா விற்ற ஜோடி… போலீஸிடம் சிக்கியது எப்படி?…

கேரளாவில் புலம்பெயர்ந்தோர் குடியிருப்புப் பகுதிகளில் தம்பதியினர் போல் நடித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரும்,…

12 seconds ago

திமுகவிற்கு அதிர்ச்சி… EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்… அரசியலில் பெரும் பரபரப்பு…!

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் பிரமுகரான வி. பண்டரிநாதன், திமுகவில் இருந்து விலகி, அக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…

9 minutes ago

திரையுலகில் அதிர்ச்சி… இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மீண்டும் ஒரு சோகம்… சற்றுமுன் வெளியான காரணம்…!

இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்புகள் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளன. தேவாவின் உறவினரான கார்த்திக் சபேஷ்…

18 minutes ago

தள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தல்?… சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025 ஜனவரி 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகப்…

24 minutes ago

“ரொம்ப கஷ்டப்பட்டேன்…” தயவுசெஞ்சி இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க…! மனம் உருகி பேசிய நடிகர் அப்புக்குட்டி…!!

தேசிய விருது வென்ற பிரபல நடிகர் அப்புக்குட்டி, 'பண்டமாற்று' குறும்பட விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, திரைத்துறையில் உள்ள நடிகர்கள் யாரும்…

26 minutes ago

அக்டோபர் மாதமே சாபமா…? சகோதரர், தேவா, தம்பி மகன் கார்த்திக் சபேஷ் என அடுத்தடுத்த மரணம்… அதிர்ச்சியில் பிரபலங்கள்…!!

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமான சில நாட்களிலேயே, அவரது தம்பி மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் உயிரிழந்த சம்பவம் தமிழ்…

40 minutes ago