உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும், பைக் வாங்குவதற்கும் பணம் தேவைப்பட்ட இரண்டு சிறுவர்கள், தங்களின் 16 வயது நண்பனான விவேக் என்பவனிடம் தங்கச் சங்கிலி கேட்டுள்ளனர். அவன் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தச் சிறுவர்கள் அவனைக் கொடூரமாகக் கொலை செய்யத் திட்டமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, விவேக்கை தனி இடத்திற்கு அழைத்துச் சென்று அவனது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பின்னர், யாரிடமும் சிக்காமல் இருக்க அவனது உடலை அருகிலுள்ள சாக்கடையில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். விவேக் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அந்த இரண்டு சிறுவர்களையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
