அதிமுகவில் இணையும் நடிகர் தனுஷ்… சற்றுமுன் அரசியலில் புதிய பரபரப்பு…!

By Devi Ramu on ஐப்பசி 17, 2026

Spread the love

அதிமுகவில் நடிகர் தனுஷ் இணைந்தால் அவரை இருகரம் கூப்பி வரவேற்போம் என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்து தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஊடகப் பேட்டி ஒன்றில் பேசிய அவர், நடிகர் தனுஷ் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்றும், சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரலாம் என்றும் கூறியுள்ளார்.

அதேசமயம், அரசியலுக்கு வந்த பிறகு அவர்கள் தொடர்ந்து நடிக்கக் கூடாது என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். அதிமுகவில் தனுஷ் இணையவுள்ளதாகத் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தகவல்கள் பரவி வரும் நிலையில்,ராஜேந்திர பாலாஜி அவர்களின் இந்த வரவேற்பு அறிக்கை அரசியல் அரங்கில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.