ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத்தில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 21 வயது வாலிபர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த ஆசிரியையைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த படுகொலையைச் செய்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே அவர் திட்டமிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்கொலைச் சம்பவத்திற்காகவே அவர் பிரத்யேகமாகக் கத்தி ஒன்றை விலைக்கு வாங்கி தாக்குதலை நடத்தியுள்ளார். அதேவேளையில், இந்தத் தொல்லை குறித்து ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதே ஆசிரியையின் உயிரிழப்பிற்குக் காரணம் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட இக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…