அடேய்… அவங்க கூட தான் ஆடுவியா?… கண் எதிரே மற்ற பெண்களுடன் கணவன் ஆட்டம்… மனமுடைந்து இளம் மனைவி… எடுத்த அதிர்ச்சி முடிவு… திக் திக் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 26, 2026

Spread the love

கௌஹாத்தி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 22 வயதான நிமிஷா தக்கூரியா என்ற மாணவி, கௌஹாத்தியின் அசாரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆசிஃப் அலி என்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிஃப் அலி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், நிமிஷா விடுதியின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், முறையான விசாரணை மற்றும் ஆதாரங்கள் இல்லாமல் அவரது கூற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்று காவல்துறை தெளிவாகக் கூறியுள்ளது.

   

இவ்வழக்கு குறித்து ஊடகங்களிடம் பேசிய கௌஹாத்தி மூத்த காவல்துறை அதிகாரி போலின் தியோரி, இறப்பிற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தடையவியல் நிபுணர்கள் களத்தில் ஆய்வு செய்து வரும் நிலையில், உடற்கூறாய்வு அறிக்கைக்கு பிறகே இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து முழுமையான உண்மை தெரியவரும்.