“ஸ்னாப்சாட்டில் மலர்ந்த ஆபத்தான நட்பு…” நண்பனை சந்திக்க சென்ற 12-ம் வகுப்பு மாணவி… விடுதிக்கு அழைத்து சென்று சீரழித்த கொடூரன்…! நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 26, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி ஒருவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு ‘ஸ்னாப்சாட்’ செயலி மூலமாகக் கிருஷ்ணா கத்வானி என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாளடைவில் இருவரும் தீவிரமாகப் பேசி பழகி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி மாலை மாணவியைச் சந்திப்பதற்கு கிருஷ்ணா அழைத்துள்ளார். இதனை நம்பிய மாணவி, தனது வீட்டில் டியூஷன் வகுப்பிற்குச் செல்வதாகப் பொய் கூறிவிட்டு மாலை 5:15 மணியளவில் கிருஷ்ணாவைச் சந்திக்கச் சென்றுள்ளார்.

அங்குச் சென்ற மாணவியை நயவஞ்சகமாகக் கூட்டிச் சென்ற கிருஷ்ணா, உள்ளூர் விடுதி அறை ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவி எதிர்ப்புத் தெரிவித்தபோது, அவளது தந்தையைக் கொன்று விடுவதாகவும், அவளது ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து பயந்து நடுங்கிய மாணவி, வீட்டிற்குத் திரும்பித் தனக்கு நேர்ந்த கொடூரத்தைச் பெற்றோரிடம் கண்ணீருடன் கூறியுள்ளாள்.

   

சமூகப் பழிச்சொல்லுக்கு அஞ்சிய குடும்பத்தினர் முதலில் காவல் நிலையத்திற்குச் செல்லத் தயங்கினாலும், பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு செப்டம்பர் 24 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலிஸார் கிருஷ்ணா கத்வானி மீது போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கப் பதிவு செய்துள்ளனர். விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய கிருஷ்ணாவை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.