அய்யய்யோ… வீட்டு வாசலிலேயே காத்திருந்த ஆபத்து… 5 நிமிஷம் உள்ள வரட்டுமா?… ஜெப்டோ ஊழியரின் அதிர வைக்கும் லீலை… பதறவைக்கும் பின்னணி…!

By Swetha on ஆவணி 3, 2026

Spread the love

ஜெப்டோ டெலிவரி ஊழியர் ஒருவர், தனது வீட்டிற்குள் வர அனுமதி கேட்டு தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், மறுத்த பிறகும் பயமுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். வீட்டிற்கு ஆர்டர் கொண்டு வந்த அந்த ஊழியர் குடிநீர் கேட்டதால், அப்பெண் ஒரு தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துள்ளார். அதைக் குடித்த பிறகு மேலும் தண்ணீர் கேட்ட ஊழியர், 5 நிமிடங்கள் வீட்டிற்குள் அமர அனுமதிக்குமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்தியுள்ளார். அப்பெண் வெளியில் அமர இடம் இருப்பதாகக் கூறியும், கதவை மூட முயன்றபோதும், அவர் தொடர்ந்து அழைப்பு மணியை அடித்து, கதவைத் தட்டி உள்ளே வர முயன்றதால் அப்பெண் பயந்து வீட்டிற்குள் அடைக்கலமானார்.

இச்சம்பவம் குறித்து அப்பெண் ஜெப்டோ நிறுவனத்திடம் புகார் அளித்ததுடன், அவர்களின் புகார் நிவர்த்தி முறையையும் விமர்சித்துள்ளார். பின்னர் வெளியிட்ட அடுத்த வீடியோவில், சம்பந்தப்பட்ட ஊழியரின் கணக்கை ஜெப்டோ நிறுவனம் ரத்து செய்துவிட்டதாகவும், அப்பெண்ணின் வீட்டிற்கு அருகில் அவர் வராதவாறு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், டெலிவரி ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள் எதுவும் தன் வசம் இல்லாததாலேயே தான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றும் அப்பெண் விளக்கம் அளித்துள்ளார்.

   

இதேபோல், இந்த மாத தொடக்கத்தில் பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் ஒருவர் கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டு, பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது ஜெப்டோ ஊழியர் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.