ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கரில் ஒரு அதிர்ச்சிகரமான மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரூ 30,000 பணத்தை முதலீடு செய்தால் அதை இரண்டு அல்லது மூன்று மடங்காக மாற்றித் தருவதாகக் கூறி, ஏமாற்றுப் கும்பல் ஒன்று பொதுமக்களிடம் பெருந்தொகையைச் சுருட்டியுள்ளது. ஏமாந்த மக்கள் தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அந்த கும்பல் போலியான ரூபாய் நோட்டுகளை அவர்களிடம் கொடுத்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளது.
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற பேராசையைப் பயன்படுத்தி, இதுபோன்ற கும்பல்கள் அப்பாவி மக்களைச் சாமார்த்தியமாக வலைவீசிப் பிடிக்கின்றன. இந்தச் சம்பவம் நம் அனைவருக்குமே ஒரு பலத்த எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வாகவும் அமைந்துள்ளது. கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை இதுபோன்ற போலி திட்டங்களில் இழப்பது மக்களுக்குப் பெரும் பொருளாதார இழப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
https://twitter.com/Mariyam_MBD/status/2083874951610638357/video/1
இன்று இதுபோன்ற மோசடிக் கும்பல்கள் அனைத்து இடங்களிலும் பரவலாக உலா வந்து கொண்டிருக்கின்றன. எனவே, “குறைந்த காலத்தில் இரட்டிப்பு பணம்” போன்ற பேராசை காட்டும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை யாரும் எளிதில் நம்பக் கூடாது. பொதுமக்கள் அனைவரும் எப்போதும் மிகுந்த விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
