அதிர்ச்சி… ஜீ பூம்பா,மர்மதேசம் சீரியல் நடிகர் திடீர் தற்கொலை…சோகத்தில் ரசிகர்கள்…

By Begam

Updated on:

பிரபல சீரியல் நடிகர் லோகேஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் 90’s கிட்ஸ்  ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மர்ம தேசம்’ சீரியலில் ராசு என்னும் கதாபாத்திரத்திலும், ‘விடாது கருப்பு’ மற்றும் ‘ஜீ பூம்பா’ உள்ளிட்ட சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தவர் லோகேஷ் ராஜேந்திரன். இவர் நடிகராக மட்டுமின்றி இளம் இயக்குனராகவும் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

   

இந்நிலையில், சென்னையில் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் லோகேஷ் ராஜேந்திரன் மறைவு, 90’s கிட்ஸ்  ரசிகர்களையும், திரையுலத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் லோகேஷ் ராஜேந்திரனுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை கமெண்ட்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

author avatar